சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் பெருவிழா அழைப்பிதழில், தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடுஅரசு லோகோவை தவிர்து, மத்தியஅரசின் லோகோவை பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் செயலுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 12 ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
