கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையின் போது பானையில் மஞ்சள் சுற்றி பொங்கல் வைப்பதே தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏராளாமான விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே பூசாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.
ஒரு ஜோடி மஞ்சள் ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும் மட்டுமே விற்பனையாவதால் சாகுபடி செலவுக்கு கூட கட்டுபடி ஆகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு மூட்டை ரூ.20,000 வரை விலை கிடைத்தால் மட்டுமே மஞ்சள் விவசாயம் லாபகரமாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மஞ்சள் விவசாயிகளை காக்க வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.