புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் ஜாதிய பாகுபாடு விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இனமக்களை மாவட்ட ஆட்சியர் அங்குள்ள கோயிலுக்குள் அழைத்து சென்ற போது சாமியாடி சாதிய பாகுபாடு காட்டியதாக சிங்கம்மாள் என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் அங்குள்ள டீ கடையில் இரட்டை குவளை முறையை நடைமுறைப்படுத்தியதாக டீக்கடை உரிமையாளர் மூக்கையா என்பவரையும் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 27ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஜாமீன் கோரி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு கடந்த 3ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதி ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களின் ஜாமீன் மனுவிற்கான விசாரணை நீதிபதி சத்யா முன்பு நடைபெற்றது.
அப்போது, சிங்கம்மாள், மூக்கையா ஆகியோருக்கு ஜமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.
newstm.in