சாதி பெயரை சொன்னாரா திரிஷா… வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள் – என்ன ஆச்சு?

Trisha Caste Issue: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும், அதைவிட தனித்துவமான பல பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 

சமீபத்தில், திரைத்துறையில் தனது 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை திரிஷாவின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி தீர்த்தனர். இதனால், நெகிழ்ச்சியடைந்த திரிஷா திரைத்துறையில் தொடர்ந்து இயங்குவேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், கடந்த டிசம்பர் இறுதியில் அவர் நடித்த ராங்கி என்ற திரைப்படம் வெளியானது. அவர் பெரிதும் கொண்டாடப்பட்டாலும், ராங்கி திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும், படத்தின் ப்ரமோஷனுக்கு திரிஷா சுறுசுறுப்பாக பணியாற்றினார். இந்த படம் தொடர்பான பேட்டி ஒன்றில், உங்களுக்கு பிடித்தமான உணவு வகை எது என நெறியாளர் கேட்ட கேள்விக்கு திரிஷா அளித்த பதில்தான் தற்போது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. நெறியாளர் கேட்ட அந்த கேள்விக்கு,”தென்னந்தியா பாணியில் வீட்டில் சமைத்த பிராமிண் உணவு தான் எனக்கு பிடித்தது” என பதிலளித்தார். 

ஆனால், அவர் தனது சமூகத்தின் பெயரை சொல்ல வேண்டும் என கூறாவிட்டாலும், பொதுவெளியில் அதை பகிர்ந்தை நெட்டிசன்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். ஒரு சிலரோ அவர் சொன்னதில் என தவறு இருக்கிறது என சொல்ல இரு தரப்பும் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர். பொதுவாக, தமிழ்நாட்டில் நடிகர்களின் மதம், சாதி ஆகியவற்றை கடந்து சினிமா என்ற ஒற்றை புள்ளியில் மட்டும் ரசிகர்கள் அவர்களை விரும்பி வந்தனர். 

தற்போது, இதுபோன்று சாதி பெயர்களை வெளிப்படையாக தெரிவிப்பது என்பது அந்த கண்ணாடி போன்ற அமைப்பில் கல் எறிவதற்கு சமம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ, அவர் ஆதிக்க மனப்பான்மையிலேயோ அல்லது தனது சாதியை நிறுவவோ அவ்வாறு கூறவில்லை, தனக்கு பழக்கப்பட்ட உணவு முறை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில்தான் அவ்வாறு பேசினார் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா நடிப்பில் 2022இல் வெளியான பொன்னியின் செல்வன் மெகா ஹிட் அடித்த நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.