திண்டுக்கல்: சுற்றுலாதலமான கொடைக்கானலில் உறைபனி காலம் தொடங்கியது. மலைப்பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கடும் உறைபனி நிலவியதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலை நிலவரப்படி கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
