தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (10.01.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்
ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சென்னை
பெரம்பூர் பகுதிகளான காந்தி நகர், முத்தமிழ் நகர் 4 மற்றும் 5 பிளாக் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.