`தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்… வெளிநடப்பு செய்த ஆளுநர்!’ – சட்டசபை காட்சிகள்!

2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று(09-01-2023) தொடங்கியது. கடந்த சட்டசபைக் கூட்டத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்த உரையில் இடம்பெறாத ‘ஜெய்ஹிந்த்’ என்னும் வார்த்தை ஆளுநர் குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், சமீபத்தில் தமிழகம் – தமிழ்நாடு பிரச்னைக்கு இடையில் நடக்கும் சட்டசபைக் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லாத அளவு, ஆளுநர் உரையின் நிகழ்வு பல பரப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சட்டசபை

நேற்று காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்த ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் அப்பாவு சார்பாக பூச்செண்டு வழங்கி, சிவப்பு கம்பளம் விரித்து அரசு மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் சட்டசபைக்குள் நுழைந்து உரையைத் தொடங்கும் முன்பே ஆளுநரைப் புறக்கணிப்பதாக திமுக அரசின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை, மதிமுக கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுப்பட்டனர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ஆளுநர் ரவி, தனது உரையைத் தொடர்ந்து வாசித்தார். இதனால், கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் ‘ஆளுநர் ரவி’

திமுக அரசு ஸ்கோர் செய்த இடங்கள்!

தமிழ்நாடா? தமிழகமா? என்ற ஆளுநர் பற்ற வைத்த நெருப்பு கடந்த சில தினங்களாகவே மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. அதற்குப் பதிலடி தரும் விதமாக திமுக அரசு “திராவிட மாடல் ஆட்சியைக் குறித்து பல இடங்களில் பேசியிருந்தது. அதேபோல், சமூகநீதி, சுயமரியாதை பற்றியும், அதை வளர்த்தெடுத்த அரசியல் தலைவர்களான அண்ணா, காமராஜர், கருணாநிதி பெயர்களும் பத்தி 65-ல் குறிப்பிடப்பட்டிருந்ததது. திராவிட ஆட்சியில் வளர்ச்சி இல்லை என்னும் கருத்து ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் தரும் விதமாக, இந்தியா டுடே வெளியிட்டிருந்த கருத்து கணிப்பு உரையில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், சமூகநீதி சமத்துவம், பகுத்தறிவு விளைவாகவே தமிழ்நாடு பல விதத்திலும் வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளது. இதனால்தான் அண்மையில் பிரதமரின் ஆலோசனை குழு ஆய்வு செய்ததில், தமிழ்நாடு சமூக வளர்ச்சி குறியீட்டில் 63.3 புள்ளிகள் பெற்று இந்தியாவில் முதல் மாநிலமாகப் பெயர் பெற்றது. இவ்வாறு தமிழ்நாடு மற்றும் அதன் கொள்கைகள் குறித்த தகவல்கள் உரையில் சேர்க்கப்பட்டிருந்தன.

ஸ்டாலின்

ஒட்டியும் வெட்டியும் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை !

கடந்த ஜனவரி 5-ம் தேதியே ஆளுநர் உரை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒரு நாள் கடந்து ஜனவரி 7-ம் தேதி ஆளுநரால் ஒப்புதல் கையொப்பம் போடப்பட்டது. ஆனால், சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரை பல இடங்களில் ஒட்டியும் வெட்டியும் இருந்தது.

குறிப்பாக, தமிழ்நாடு எனக் குறிப்பிட்ட இடங்களில் தமிழகம் என மாற்றியும் இரண்டு இடங்களில் திராவிட மாடல் எனக் கூறப்பட்டிருந்தது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. அதேபோல், சமூக நீதி, சுய மரியாதை, அண்ணா, காமராஜர், கருணாநிதி எனக் குறிப்பிட்டிருந்த தலைவர்கள் பெயர்கள் வாசிக்கப்பட்டவில்லை. மேலும், விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் ஒளவையார் கவிதைகள் உரையில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தன. அமைசச்சரவைக் கூடி ஒப்புதால் வழங்கிய உரையை மாற்றி வாசித்தது பெரும் சர்ச்சயைக் கிளப்பியது.

ஆளுநர் கையெழுத்திட்ட வரைவு

தீர்மானம் வாசித்த முதல்வர்… வெளிநடப்பு செய்த ஆளுநர்!

இதனால், ஆளுநர் உரையை முடித்த உடனே, முதலமைச்சர் எழுந்து பேசத் தொடங்கினார். அதில், “தமிழ்நாட்டின் திராவிட கொள்கைகளுக்கு முற்றிலுமாக மாறாக செயல்படும் ஆளுநரை ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், நாங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்தோம். ஆனால், தமிழக அரசாங்கத்தின் வரைவு ஏற்று ஒப்புதல் அளித்துவிட்டு அதற்கு மாறாக நடப்பது சட்டசபை மரபுகளுக்கு எதிரானது. எனவே, ஒப்புதல் அளிக்கப்பட்டதுக்கு மாறாக படித்த ஆளுநர் உரை இடம்பெறாது” என தீர்மானத்தை முன் மொழிந்தார்.

ஆளுநர் வெளிநடப்பு

ஸ்டாலின் படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் பாஜக மற்றும் அதிமுக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. அதன்பிறகு, ஆளுநரும் தேசியகீதம் பாடுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.