துணிவு, வாரிசு அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ஏகப்பட்டோர் ரசிகர்களாக இருக்கின்றனர். இரண்டு பேரின் பட வியாபாரமும் பல நூறு கோடிகளில் நடப்பவை. எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்தும், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய்யும் நடித்திருக்கின்றனர்.இரண்டு படங்களில் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இரண்டு படங்களும் நாளை ரிலீஸாகின்றன. சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு இரண்டு பேரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளம், போஸ்டர் என பல்வேறு வகையில் தங்களுடைய போட்டியை இரு ரசிகர்களும் காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது. பொதுவாக விஜய்-அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும் 4 மணிக்கும் நடைபெறும். அப்படி இந்தப் படங்களுக்கும் ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவிருக்கின்றன.

இந்தச் சூழலில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களுக்கு பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, 13,14,15,16 ஆகிய தேதிகளில் அதிகாலை சிறப்புகாட்சிகள் (4 மற்றும் 5 மணி காட்சிகள்) ரத்து செய்யப்படுகின்றன. 

மேலும் திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பார்க்கிங் மற்றும் டிக்கெட் கட்டணம் அதிகப்படியாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.