பெண் மருத்துவரிடம் அந்த வார்த்தைகள் கூறி கெஞ்சிய இளவரசர் ஹரி: அவரே வெளிப்படுத்திய சம்பவம்


பிரித்தானிய இளவரசர் ஹரி தமது வாழ்க்கையை மாற்றும் வகையில் தமக்கு உதவ வேண்டும் என மருத்துவரிடம் கெஞ்சியதாக தமது நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

பெண் மருத்துவரிடம் கெஞ்சிய ஹரி

ஒருமுறை மனம்விட்டு அழ வைத்துவிடுங்கள் என அந்த பெண் மருத்துவரிடம் ஹரி கெஞ்சியுள்ளார்.
முதன்முறையாக அந்த பெண் மருத்துவரை சந்திக்க சென்ற ஹரி, தாம் கொஞ்சம் பதட்டமாக அப்போது இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பெண் மருத்துவரிடம் அந்த வார்த்தைகள் கூறி கெஞ்சிய இளவரசர் ஹரி: அவரே வெளிப்படுத்திய சம்பவம் | Harry Heartbreaking Words Begging Therapist

@getty

மட்டுமின்றி, கண்ணீர்விட்டு அழ தமக்கு உதவ வேண்டும் எனவும் அந்த மருத்துவரிடம் ஹரி கெஞ்சியுள்ளார்.
ஜனவரி 10ம் திகதி உலகமெங்கும் வெளியாகியுள்ள ஹரியின் நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில், சலுகை விலையில் தமக்கான உடைகளை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், அதும் 15 நிமிடங்களில் தேவையான உடைகளை தாம் தெரிவு செய்துள்ளதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது 58 வயதாகும் அமெரிக்க நடிகை Courteney Cox உடன் காளான் பயன்படுத்தியதாகவும், 17 வயதில் போதை மருந்து பழக்கத்தை தொடங்கியதாகவும் ஹரி குறிப்பிட்டிருந்தார்.

இளவரசி டயானா

தற்போது 38 வயதாகும் ஹரி, முதன்முறையாக ஒரு பெண் உளவியல் மருத்துவரை சந்தித்ததாகவும், அவரை சந்திக்கும் முன்னர் பதட்டமாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவரிடம் அந்த வார்த்தைகள் கூறி கெஞ்சிய இளவரசர் ஹரி: அவரே வெளிப்படுத்திய சம்பவம் | Harry Heartbreaking Words Begging Therapist

@pa

மேலும், தங்களின் உரையாடல் தாயார் இளவரசி டயானா தொடர்பில் தொடங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது தாயாரை நான் இழந்துவிடுவேனோ என்ற அச்சம் என்னை வதைக்கிறது என தாம் கூறியபோது, மொத்தமாக குழம்பிப்போன அந்த மருத்துவர் என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார் எனவும் ஹரி தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

தாயார் மறைவால் தமக்குள் ஏற்பட்டிருந்த அந்த தாக்கம் உளவியல் மருத்துவ ஆலோசனைகளால் குணமானதாக ஹரி தெரிவித்துள்ளார்.
தாயார் டயானா தொடர்பான நினைவுகள் மொத்தம் மறைந்துவிட்டது என கூறியுள்ள ஹரி, புகைப்பட தொகுப்புகள் ஒன்றும் தமக்கு தற்போது உதவுவதில்லை என்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.