புதுடெல்லி: டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: அண்மைக்கால டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனியுரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தீங்கிழைக்கும் வகையிலும், அவதூறுகளை பரப்பும் வகையிலும் உள்ளடக்கங்கள் காணப் படுகின்றன.
முதியோர், நடுத்தர வயது, சிறு குழந்தைகள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் அனைத்து விதமான சமூக பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட குடும்பங்களில் பொழுதுபோக்கிற்கான பொதுத் தளமாக தொலைக்காட்சி மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், பொறுப்புணர்வையும், ஒழுக்கத்தையும் அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய இடத்தில் டிவி சேனல்கள் உள்ளன. அதற்காகவே, நிகழ்ச்சி விதிமுறைகள், விளம்பர விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரிஷப் பந்த் கார் விபத்து
ஆனால், சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக் கங்களை எந்தவித மாற்றங்களும் செய்யாமல் ஒளிபரப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன இதற்கு உதாரணமாக, ரிஷப் பந்த்கார் விபத்து செய்தி அவரதுமுகத்தை மறைக்காமல் ரத்தத்தோடு அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டது. டெல்லியில் ஒரு பெண்காரில் சிக்கி பலியான சம்பவம்குறித்து டிவி சேனல்கள் வெளியிட்ட செய்தியிலும் அதேபோல்தான் இருந்தது. இதுபோன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட ஒளிபரப்புகள்குழந்தைகளிடம் எதிர்மறையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். முதியோர்களிடமும் மனபயத்தை உருவாக்கும்.
நிகழ்ச்சி விதிமுறைகளை மீறும் சேனல்களின் சேவைகள் நிறுத்தப்படுவதற்கும் இது வழி வகுக்கும். சேனல்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செய்திகளை வெளியிட வேண்டும். இவ்வாறு தகவல் ஒளி பரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.