சென்னை: 12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது. நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக் கூடும் எனவும் கூறியுள்ளது.
