50 பயணிகளை பேருந்தில் மறந்துவிட்டு பறந்த விமானம்! சர்ச்சையான சம்பவம்


இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, பேருந்தில் காத்திருந்த அதன் 50 பயணிகளை மறந்து விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட Go First Airways விமானம், டார்மாக்கில் பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளை மறந்து போனதை அடுத்து, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA விமான நிறுவனத்திடம், இந்த சம்பவம் குறித்த அறிக்கையை அறிக்கை கேட்டுள்ளது.

மிகவும் பயங்கரமான அனுபவம்

ட்விட்டரில் பல பயணிகள் விமான நிறுவனத்தை அவதூறாகப் பேசியதை அடுத்து, இந்த விடயத்தை கவனித்து வருவதாக டிஜிசிஏ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று தெரிவித்தது. மேலும் இந்த சம்பவம் “மிகவும் பயங்கரமான அனுபவம்” என்று கூறியது.

50 பயணிகளை பேருந்தில் மறந்துவிட்டு பறந்த விமானம்! சர்ச்சையான சம்பவம் | Go First Flight Forgets 50 Passengers BusCredit: Twitter/@GoFirstairways

என்ன நடந்தது?

ஜி8 116 என்ற விமானம் திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நான்கு பேருந்துகளில் பயணிகள் விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோ ஃபர்ஸ்ட் விமானம் புறப்பட்டபோது சுமார் 55 பயணிகள் பேருந்து ஒன்றில் காத்திருந்தனர்.

இதையடுத்து, பயணிகள் விமான நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தை டேக் செய்து ட்விட்டரில் புகார் அளித்தனர்.

பயணிகளின் போர்டிங் பாஸ் மற்றும் பைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன.

கோ ஃபர்ஸ்ட் ஏர்வேஸ், ட்வீட்களுக்கு பதிலளித்து, “ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று கூறியது.

பின்னர், நான்கு மணி நேரம் கழித்து, காலை 10 மணியளவில் புறப்பட்ட விமானத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.