காலில் கட்டுடன் ஆல்யா மானசா

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்று நேற்றைய தினம் இணையதளங்களில் வைரலானது. இதுகுறித்து ஆல்யா கூறுகையில், 'எதிர்பாராத விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுவிட்டது. என்னால் நடக்க முடியவில்லை. எனினும் சிறிது சிறிதாக குணமாகிறது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

அவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததன் காரணமாக அதிகரித்த உடல் எடையை கடுமையான பயிற்சிகளை செய்து குறைத்த ஆல்யா தற்போது 'இனியா' சீரியலின் மூலம் அண்மையில் தான் கம்பேக் கொடுத்தார். ஆனால் அதற்குள், ஆல்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் பூரண குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள ஆல்யா, தான் படப்பிடிப்புக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் நிம்மதியடைந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கவனமாக இருக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.