ராஜமௌலி இயக்கிய ‘RRR’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்ட நிலையில் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினருக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every Indian very proud. https://t.co/zYRLCCeGdE
— Narendra Modi (@narendramodi) January 11, 2023
அந்த வகையில் பிரதமர் மோடியும் தனது வாழ்த்து செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “இது மிகச் சிறந்த சாதனை. கீரவாணி, பிரேம் ரச்சிதா, கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ‘RRR’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க விருது அனைத்து இந்தியர்களையும் பெருமை அடைய செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
.@mmkeeravaani @ssrajamouli @RRRMovie for all your hard work, well deserved win.. am very happy.. congratulations.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 11, 2023
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, “கீரவாணி, எஸ்.எஸ் ராஜமௌலி, RRR படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Incredible ..Paradigm shift Congrats Keeravani Garu from all Indians and your fans! Congrats @ssrajamouli Garu and the whole RRR team! https://t.co/4IoNe1FSLP
— A.R.Rahman (@arrahman) January 11, 2023
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அசாத்தியமானது, இது அனைவருக்குமான முன்னுதாரணம். அனைத்து இந்தியர்கள் சார்பாகவும், உங்கள் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகள் கீரவாணி. இயக்குநர் ராஜமௌலி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #RRR படத்தின் #NaatuNaatu பாடலுக்காக #GoldenGlobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 11, 2023
“தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக விருது வென்று தந்திருக்கிறார். முன்னமே யூடியூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்” என்று நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
THANK YOU Keeravani and Rajamouli for making us proud and bringing home the Golden Globe for Indian cinema.@mmkeeravaani @ssrajamouli
— Rajinikanth (@rajinikanth) January 11, 2023
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த வெளியிட்டுள்ள வாழ்த்து ட்வீட்டில், “இந்திய சினிமாவுக்காக கோல்டன் குளோப் விருதை வென்று அதைத் தாயகம் கொண்டு வந்து நம்மைப் பெருமைப்படுத்தியிருக்கும் கீரவாணிக்கும் ராஜமௌலிக்கும் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற பாலிவுட் நடிகர்களும் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவினருக்குத் தெரிவித்துள்ளனர்.