கவச உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்..!

பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து 11-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்கள் இன்று கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று காலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த காலத்துக்கு பின்னர், அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் சுமார் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 2,472 பேருக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1-ம் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 11-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். இதன்படி இன்று (ஜன.12) சென்னை எழும்பூரில் கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.