சிவகுமாரின் திருக்குறள் 100

பழம்பெரும் நடிகர் சிவகுமார் 100 திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற கண்ணோட்டத்தில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி, அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். சிவகுமாரின் இந்த சாதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாராகி உள்ளது. இந்த நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16,17 ஆகிய 3 நாட்கள் பிற்பகல் 3 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து சிவகுமார் கூறியதாவது: 40 ஆண்டுகள் திரைப்படங்களில், நாடகங்களில், சின்னத்திரையிலும் பணியாற்றினேன். என் 64 வயதில் இனி மேக்கப் போட்டு நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். பின்னர் இலக்கியம் பக்கம் திரும்பினேன். கம்பராமாயணம் மொத்த கதையையும் 100பாடல்கள் வழியாக விளக்கிப் பேசிய முதல் மனிதர் நான்தான் என இப்போது கூறுகிறார்கள். அது மிகப்பெரும் மகிழ்ச்சி. மகாபாரதத்தை 2 மணி 10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன்.

இப்போது திருக்குறளைப் பேசியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று முதலில் பயமுறுத்தினார்கள். 3 வருடம் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன். இப்போது இதன் உரிமை பெற்று புதிய தலைமுறை பொங்கல் திருநாளில் ஒளிபரப்புகிறார்கள். எல்லோரும் பார்த்து ரசியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்கிறார் சிவகுமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.