ராஜஸ்தானில் உள்ள கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசிப் பிரசாதம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ராஜஸ்தானின் ஸ்ரீநாத்ஜி கோவிலை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் வசிக்கின்றனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்களான, அம்பானி, டாடா என பல குடும்பங்கள் உட்பட உலக பணக்காரர்கள் பலரும் ஸ்ரீநாத் கோவிலுக்கு அடிக்கடி செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஒன்றை வீட்டில் வைத்தாலும், உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வார் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை ஆகும்.
அரிசியின் மகிமை
ஸ்ரீநாத் கோவிலில் ஆண்டுதோறும் அன்னகூட் திருவிழா நடைபெறுவது வழக்கம். அங்கு படைக்கப்படும் அரிசியை எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால், எப்போதும் குடும்பத்தில் செல்வம் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
முகேஷ் அம்பானி குடும்பம்
கோடிக்கணக்கான மக்கள் ஸ்ரீநாத் கோயிலில் நம்பிக்கை கொண்டுள்ளனர் மற்றும் பக்தர்கள் ஆண்டு முழுவதும் இங்கு வந்து செல்கின்றனர். இதில் முகேஷ் அம்பானியும் இடம்பெற்றுள்ளார். அம்பானி குடும்பத்தினர் எந்த ஒரு சுப காரியத்திற்கும் முன் கண்டிப்பாக இங்கு வந்து தரிசனம் செய்வார்கள். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் மகனின் திருமண நிச்சயதார்த்தம் இங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நாதிர் ஷாவின் கண் பார்வை
பிப்ரவரி 16, 1739 இல் டெல்லியை கைப்பற்றப்பட்ட பிறகு, நாதிர் ஷா நாத்வாராவுக்கு சென்று, அங்குள்ள ஸ்ரீநாத் ஆலயத்தின் கருவூலத்தை அடைய முயற்சித்தார். அப்போது, கோவிலின் படிகளில் ஏறியவுடன் கண்களின் பார்வை போய்விட்டது. தனது தவறுக்கு பிராயசித்தமாக, நாதிர்ஷா கோயிலின் படிகளை சுத்தம் செய்த பிறகு, கண்பார்வை மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீநாத் ஜி கோயிலில் இருக்கும் மூல விக்கிரகம் சுயம்புவாக உருவானதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வைணவ சமயத்தைக் கடைபிடிக்கும் பல லட்சம் பேருக்கு, ஶ்ரீநாத் ஜி கோயில் ஒரு முக்கிய புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது.
கருப்பு நிற ஒற்றை மார்பிள் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர், கோவர்தன மலையை தன் இடது கையால் தூக்கிப் பிடித்துள்ளது போன்ற சிலை இங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. நத்துவாரா ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.