ஈரோடு: திரிபுராவில் இறந்த ஈரோட்டைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. 18 ஆண்டுகள் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த வடிவேல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் ராணுவ மரியாதை செய்யப்பட்டு வீரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
