பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண்னுக்கு நடிகர் விஜய் சார்பில் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி 16 வயது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அந்த மாணவியை நான்கு பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது உடலுக்கு தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை குடும்பத்தார் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்டு சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான மாணவியின் வாக்குமூலத்தின் பேரின் 4 பேரை திருவள்ளூர் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தனக்கு உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்ட மாணவி நடிகர் விஜய்யிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யுமாறு விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் திருவள்ளூரில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ரூ.50,000 உதவித்தொகை வழங்கினர்.
மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட பெண்ணை விரைவில் சந்திப்பார் என்றும் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
newstm.in