மாநிலம் முழுவதும் வட மாநிலத்தவர்கள் கணக்கெடுப்பை தொடங்கிய தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வட மாநிலத்தவர்கள் குறித்த கேள்வியை எழுப்பினார். அவர் பேசும்போது, வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். 

இதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 25 கொலை வழக்கு, 24 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்..

மேலும், தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும், தகவல் சேகரித்து வருவதாக கூறினார். அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மனித வள அதிகாரிகள் மூலம் தகவல்கள் பெறப்படுகிறது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்தேகப்படும் நபர்கள் குறித்து அந்தந்த மாநிலங்களின் காவல்துறை மூலம் தகவல்கள் பெறப்படுகிறது என்றார். மேலும், குற்றச்சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.