சமீப நாட்களாகவே சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். அதே சமயம் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று சென்னை வேப்பேரி பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் முறைப்படி இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடியும் கார்களில் சீட் பெல்ட் அணிந்த படியும் பயணம் செய்த 100 பேருக்கு ரோஜா பூ வழங்கி போக்குவரத்து போலீசார் பாராட்டினார்கள்.
இதையடுத்து, அவர்கள் இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பயணம் செய்தவர்களை பாராட்டி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.