புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே முதியவர், 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளுக்கு பொங்கல் சீரை சைக்கிளில் கொண்டு சென்று வழங்கினார்.
வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்லதுரை -அமிர்தவள்ளி தம்பதி, தங்களின் மகள் சுந்தரம்பாளை 20 ஆண்டுகளுக்கு முன் நம்பம்பட்டி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
அவருக்கு 12 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. செல்லதுரை தனது மகளுக்கு குழந்தை பிறந்தால்,வருடாவருடம் பொங்கல் சீரை சைக்கிளில் கொண்டு சென்று வழங்குவதாக கோவிலில் வேண்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தை பிறந்ததிலிருந்து அவர் தனது மகளுக்கு சைக்கிளில் சென்று பொங்கல் சீர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
செல்லதுரை இன்று தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, வேட்டி, உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் சீரை, சைக்களில் வைத்துக் கொண்டு, தலையில் 5 கரும்புகளை சுமந்தபடி, தனது மகளின் வீட்டிற்கு சென்று வழங்கினார்.