இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், சுப்மன் கில்லுடன் விராட் கோலி இணைந்தார்.
இருவரும் அதிரடியாக விளையாடி, இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், விராட்கோலி இறுதி வரை நிலைத்து நின்று, 110 பந்துகளுக்கு 166 ரன்கள் குவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய மைதானங்களில் அவர் அடித்த 21-வது சதமாகும். இதன் மூலம் சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.