தாராள பிரபுவாக மாறிய அமெரிக்க இளைஞர்: 31 வயதில் 57 குழந்தைகளுக்கு தந்தை


 அமெரிக்காவை சேர்ந்த 31 வயது கைலே கோர்டி என்ற இளைஞர் விந்தணு தானத்தின் மூலம் மிக குறைந்த வயதில் 57 குழந்தைகளுக்கு தந்தையாக மாறியுள்ளார்.


அமெரிக்காவின் தாராள பிரபு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 31 வயதுடைய  கைலே கோர்டி என்ற இளைஞர் இலவச விந்தணு கொடையாளராக மாறியுள்ளார்.
கைலே கோர்டியின் இந்த விந்தணு தானத்தின் மூலம் பல பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்த உதவி குறித்து விந்து கொடையாளர் கைலே கோர்டி பேசிய போது, குழந்தைளின்றி வேதனைப்படும் குடும்பத்தினருக்கு உதவும் எண்ணத்தோடு இலவசமாக இதை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தாராள பிரபுவாக மாறிய அமெரிக்க இளைஞர்: 31 வயதில் 57 குழந்தைகளுக்கு தந்தை | Usa California Youth Become Sperm DonorJam Press/@kylegordy1234

அத்துடன் இந்த சேவையை தவிர தனக்கு வேறு எத்தகைய பாலியல் வாழ்க்கையும் இல்லை என்று கைலே கோர்டி  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தை புரிந்து கொண்டு தன்னை ஏற்கும் பெண்களை தாராளமாக வரவேற்கிறேன் என்றும் கைலே கோர்டி தெரிவித்துள்ளார்.

31 வயதில் 57 குழந்தைகள்

கைலே கோர்டிக்கு 31 வயதே ஆகும் நிலையில் தன்னுடைய இந்த விந்து கொடை தானத்தின் மூலம் இதுவரை 57 குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார்.

இன்னும் 14 குழந்தைகள் தன்னுடைய விந்து தானத்தின் மூலம் பிறக்கவிருக்கிறார்கள் என்று கைலே கோர்டி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

தாராள பிரபுவாக மாறிய அமெரிக்க இளைஞர்: 31 வயதில் 57 குழந்தைகளுக்கு தந்தை | Usa California Youth Become Sperm DonorJam Press/@kylegordy1234



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.