மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் காம்லா சதுக்கம் பகுதியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு நேற்று காலை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதில் அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்ய போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இரண்டு முறையும் இதேபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காலை 11.25,11.32 மற்றும் 12.30 மணிக்கு மிரட்டல் அழைப்புக்கள் வந்துள்ளது.
