பெற்றோருடன் விடுமுறை கொண்டாட சென்ற இடத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: நொறுங்க வைக்கும் சம்பவம்


கரீபியன் தீவு நாடான பார்படாஸில் பெற்றோருடன் விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் 8 வயது சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

உடல் முழுவதும் லேசான தடிப்பு

பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனே மூளைச்சாவடைந்த நிலையில் 14ம் திகதி பகல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கடந்த வாரம் பார்படாஸ் பகுதியில் வைத்து சிறுவன் ஏஸ் Rewtastle என்பவருக்கு திடீரென்று உடல் முழுவதும் லேசான தடிப்பு ஏற்பட்டுள்ளது.

பெற்றோருடன் விடுமுறை கொண்டாட சென்ற இடத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: நொறுங்க வைக்கும் சம்பவம் | Boy Dies After Sudden Rash Brain Dead

Image: Amber Field/Facebook

இதனையடுத்து அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.
முதலில் சிறுவனுக்கு மூளைக்காய்ச்சல் என்றே கருதியுள்ளனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் சிறுவனுக்கு லுகேமியா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

குறித்த தகவலால் மொத்தமாக நொறுங்கிப்போன குடும்பம், உடனடியாக பிரித்தானியா திரும்ப தயாரானது. ஆனால் சிறுவன் ஏஸின் உடல் நிலை மோசமடைந்ததுடன் வலிப்பும் ஏற்பட்டது.
வலிப்பு காரணமாக சிறுவன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து மருத்துவர்கள் சிறுவனை கோமா நிலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள்

இந்த நிலையில், சிறுவன் ஏஸ் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்யவும், ஜனவரி 14ம் திகதி பகல் சிறுவன் மரணமடைந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தாயார் குறிப்பிடுகையில், சிறுவனின் நிலையில் இனி மாற்றம் ஏதும் இருக்காது என உறுதி செய்த பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், சிறுவனின் தந்தையே உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்த சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோருடன் விடுமுறை கொண்டாட சென்ற இடத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: நொறுங்க வைக்கும் சம்பவம் | Boy Dies After Sudden Rash Brain Dead

Image: Amber Field/Facebook

8 வயதேயான சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளதுடன், அந்த சமூகத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, பார்படாஸில் சிறுவனின் மருத்துவ செலவு மற்றும் இறுதிச் சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து 100,000 பவுண்டுகள் நிதி திரட்ட முடிவு செய்தனர்.

ஆனால் இதுவரை 116,758 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியர் ஒருவர் மொத்தமாக 10,000 பவுண்டுகள் நிதியுதவி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.