மத்திய பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு சென்ற 90 வயது மூதாட்டிக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கு ரயில் நிலையத்தில் வந்திறங்கிய 90 வயது மூதாட்டி நள்ளிரவு நேரமானதால் அங்கேயே தங்கினார். அடுத்த நாள் ஆட்டோ டிரைவர் ஒருவர் மூதாட்டியை கிராமத்துக்குச் செல்லும் பிரதான சாலையில் இறக்கி விட்டு சென்று விட்டார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை தன் இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement