
‛ரிவால்வர் ரீட்டா'-வாக மாறிய கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் உதயநிதி உடன் மாமன்னன், தெலுங்கில் நானி உடன் தசரா படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இந்தாண்டு அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இதையடுத்து சந்துரு இயக்கத்தில் ஒரு படத்தில் தமிழில் நடித்து வருகிறார் கீர்த்தி. இந்த படத்திற்கு ரிவால்வர் ரீட்டா என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனை நடிகை சமந்தா வெளியிட்டார். போஸ்டரில் கையில் இரண்டு துப்பாக்கி உடன் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கார்ட்டூன் டைப்பிலான இந்த இமேஜ் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.