நேபாளத்தில் ஓடு பாதையில் மோதி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர்.
விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. காட்மாண்டுவில் இருந்து பொக்காரா சென்றதாக தெரிகிறது. அப்போது ஓடுபாதையில் மோதி எட்டி (Yeti) ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் பயணித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 72 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
newstm.in