15 ஆண்டுகள் பழமையானது! 67 பேர் உயிர் பலிக்கு காரணமான விமானம் குறித்து முக்கிய தகவல்கள்


நேபாளத்தின் பொகாராவில் இருந்து கிளம்பிய விமானம் விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானம் தொடர்பிலான சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த் விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.

இந்த விபத்தில் தற்போது வரையில் 67 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய எட்டி ஏர்லைன்ஸ் 9N-ANC ATR-72 விமானம் குறித்த சில பின்னணி தகவல்கள்

இது ஏர்பஸ் மற்றும் இத்தாலியின் லியோனார்டோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட விமானமாகும்.

15 ஆண்டுகள் பழமையானது! 67 பேர் உயிர் பலிக்கு காரணமான விமானம் குறித்து முக்கிய தகவல்கள் | Nepal Plane Crash 5 Facts About Yeti Flight

india tv

எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆண்டுகள் பழமையானது மற்றும் பழைய டிரான்ஸ்பாண்டர் பொருத்தப்பட்டதாக விமான கண்காணிப்பு இணையதளமான FlightRadar24 தெரிவித்துள்ளது.

ஆறு ATR72-500 விமானங்களைக் கொண்ட எட்டி ஏர்லைன்ஸ்

எட்டி ஏர்லைன்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆறு ATR72-500 விமானங்களைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு தாங்கள் முன்னணி உள்ளூர் விமான நிறுவனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 9N-ANC ATR-72 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மூன்றாவது பயணத்தை மேற்கொண்டிருந்தது. இது முதலில் காத்மாண்டுவில் இருந்து பொக்காராவிற்கும், மீண்டும் காத்மாண்டுவிற்கும் முந்தைய நாள் பறந்தது.

எட்டி ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ​​பழைய விமான நிலையத்துக்கும் புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.  

15 ஆண்டுகள் பழமையானது! 67 பேர் உயிர் பலிக்கு காரணமான விமானம் குறித்து முக்கிய தகவல்கள் | Nepal Plane Crash 5 Facts About Yeti Flight

REUTERS file



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.