ஃபேக் ட்வீட் போட்டு விஜய்யின் வாரசுடு படத்தை புரோமோட் பண்றாங்களா? – உண்மை நிலவரம் என்ன?

விஜய்யின் வாரிசு படம் தமிழில் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது. படத்தை பார்த்த ஆண்கள், பெண்கள் ஏன் விஜய் ரசிகர்களுக்கே அதிருப்தியைதான் கொடுத்திருந்தது என்றே கருத்துகளை தெரிவித்திருந்தார்கள். ஏனெனில் வழக்கமான குடும்பங்களை மையப்படுத்திய சீரியல் பாணியிலான கதைக்களமாகவே வாரிசு இருந்ததாகவும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இருப்பினும் வசூல் வாரியாக கள்ளா கட்டுவதில் வாரிசு படம் தவறவில்லை என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் கடந்த ஜனவரி 14ம் தேதி ஆந்திரா, தெலங்கானாவில் வெளியான போது அந்த ஊர் ரசிகர்கள் பலரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக பட்டைய கிளப்பி வருவதாகவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகள் மூலம் காண முடியும்.

”எங்களையே ஓவர்டேக் பண்றிங்களேப்பா”.. வாரிசை தாறுமாறாக கொண்டாடும் தெலுங்கு ஆடியன்ஸ்!

அதேவேளையில், இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜயின் வாரிசு பட தெலுங்கு பதிப்புக்கு ஆந்திரா தெலங்கானாவில் கோலாகலமான வரவேற்பு பெற்றதை கண்டு கோலிவுட் ரசிகர்களே மிரண்டு போயிருக்கிறார்கள்.

ஏனெனில் தெலுங்கு ரசிகர்கள் பலரும் ஒரே ட்விட்டர் பதிவையே பதிவிட்டிருப்பதால் காசு கொடுத்து இவ்வாறெல்லாம் ட்வீட் போட சொல்லியிருக்கிறார்கள் என்ற பதிவுகளும் வைரலாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜுவே வாரசுடு படத்துக்கு பேப்பர் துண்டுகளை வீசி ஆரவாரம் செய்ததாகவும் போட்டோ ஒன்று உலா வந்துக் கொண்டிருக்கிறது.

image

ஆனால் அது பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தின் போது தில் ராஜூ செய்த ஃபேன் பாய் மொமன்ட் என சுட்டிக்காட்டியும் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருக்கிறது. கலெக்‌ஷன் ரீதியாக நல்ல வருமானத்தை பார்த்தாலும் கதைக்களமாக பெரிதளவில் எந்த ஈர்ப்பையும் வாரிசு படம் பெற்றிருக்கவில்லை என்றே பெரும்பாலான விஜய் மற்றும் சினிமா ரசிகர்களின் கருத்தாகவே இருக்கின்றன.

தெலுங்கு ரசிகர்களையே ஓவர் டேக் செய்யும் பாலிவுட்! இந்தியில் சக்க போடு போடும் வாரிசு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.