கொடைக்கானல் : அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் ஒரே கட்டணமுறை அமல்.!

மலைகளின் இளவரசி என்று எல்லோராலும் அழைக்கப்படுவது கொடைக்கானல். சர்வதேச சுற்றுலா தலமான இங்கு, பார்க்கும் இடமெல்லாம் வண்ண வண்ணமாகவும், பச்சை பசேலென்றும், கண்ணுக்கு விருந்து படைக்கும் ஏராளமான இடங்கள் உள்ளன. 

மரங்களை தேடிச்செல்லும் பறவைகளை போல, மலரைத் தேடி செல்லும், தேனீக்கள் போல கோடை வெப்பம் தாங்காமல் தவிக்கும் மக்கள் கொடைக்கானலை நாடி வருகின்றனர். தற்போது அங்கு நிலவும் குளிர் சீசனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தபடி உள்ளனர். 

இதையடுத்து, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பல வண்ணத்தில், பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா தலங்களை காண்பதற்கு ஒரே கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதன் படி, அங்கு பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என்ற அடிப்படையிலும் கட்டணத்தை வனத்துறை நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை மற்றும் தூண்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தனித்தனியே கட்டணம் தர தேவையில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.