சசிகலாவுக்கு கிரீன் சிக்னல்.. ஷாக்கில் எடப்பாடி… டெல்லி மேலிடம் மெகா பிளான்..!

பாஜகவிடம் ஓபிஎஸ் காட்டும் இணக்கம் போல ஈபிஎஸ் காட்டாமல் இருப்பதும், சட்டமன்ற தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று ஈபிஎஸ் உறுதிபட சொல்வதால் இங்குள்ள பாஜக நிர்வாகிகளின் முகமே மாறிவிடுகிறது. சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் அண்ணாவின் பெயரை வாசிக்காமல் சென்றதற்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் மவுனம் காக்கும் ஈபிஎஸ், கூட்டணி தலைமையை மட்டும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. என்னதான் டெல்லி ஆதரவு வேண்டும் என்றாலும் மாநில உரிமையை எப்படி விட்டுக்கொடுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி அதில் உறுதியாக உள்ளார்.

இதற்கு மத்தியில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. தமிழகத்தில் 20 இடங்களை பிடிப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைப்பதே கஷ்டம்தான்.

இந்த நிலையில், டெல்லி பாஜக வேறு வியூகத்தை எடுத்து வருவதாக கமலாலய வட்டாரம் சொல்கிறது. ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பை சேர்த்துவைக்க நேரத்தை வீணடிக்காமல் சசிகலாவையே கட்சியில் சேர்த்துக்கொள்ளலாமா என்ற திட்டத்தில் இருக்கிறதாம் பாஜக. எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தைக்கு ஒத்துப்போகவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவியுடன் ஓரணியில் இணைந்து மஹாராஸ்டிரா பாணியில் அதிமுகவை கலைக்க முயற்சிகள் நடக்கலாம். அல்லது சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொண்டு சசிகலாவை பிரச்சாரம் செய்ய வைத்து முக்குலத்து வாக்குகளை பெற திட்டமிட்டு வருகிறதாம் பாஜக.

இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சசிகலாவிடம் இருந்து கிரீன் சிக்னல் விழவில்லை; ஆனால் பேசிப்பார்த்தால் முடியும் என்ற நிலையாம். இந்நிலையில் சுப்ரமணியசாமியை அனுப்பி பேசி பார்க்க பாஜக திட்டமிட்டு வருகிறதாம்.

இதனை கேள்விப்பட்ட சாமி, உடனே உத்தரவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல, அது சரிப்பட்டு வராது என மேலிடம் கருதுகிறதாம். எனவே, சசிகலாவிடம் பேச வேறு ஒருவரை அனுப்பி வைக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டு வருகிறதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.