புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோரின் மகள்களை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேரின் சமூக வலைதள பக்கங்களைக் கண்டறிந்து அவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், டெல்லி போலீஸ் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, இது தொடர்பாக ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது ட்விட்டர் பதிவிற்குப் பின்னர் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தோனி, கோலி மகள்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
டெல்லி போலீஸ் சைபர் செல் போலீஸுக்கு ஸ்வாதி மாலிவால் அனுப்பிய நோட்டீஸை அடுத்தே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தோனியின் 7 வயது மகள் ஜிவா மற்றும் கோலியின் 2 வயது மகள் வாமிகாவின் புகைப்படங்களைப் பகிர்ந்த விஷமிகள் மோசமாக விமர்சித்திருந்தனர்.
मेरी नोटिस के बाद दिल्ली पुलिस ने @ImVKohli और @MSDhoni की बेटियों पर हुई अभद्र टिपण्णियों के मामले में FIR दर्ज कर ली है। बहुत जल्द सभी दोषी गिरफ़्तार होंगे और सलाख़ों के पीछे जाएँगे। pic.twitter.com/IPFE7Uky0x
— Swati Maliwal (@SwatiJaiHind) January 16, 2023