Maattu Pongal: தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டுப் பொங்கல் 2023

Happy Pongal 2023: தமிழகம் முழுவதும்  மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மாட்டுப் பொங்கல் தினத்தைக் முன்னிட்டு, வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பனிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி இந்தாண்டு, கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில் காலை யானைகளை குளிப்பாட்டி, பொட்டி வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,

மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்மானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்,

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து பழங்கள் பட்சனங்களை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாரதனைகளை செய்து பக்தர்கள் வழிபாடு சாமிதிருவூடல் உற்சவமும் நடைபெற்றது.  

தூத்துக்குடியில் நாட்டு இன பசுக்கள் வளர்க்கப்படும் கோ சாலையில் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாட்டம்;  பசுக்களுக்கு  அலங்காரம் செய்து தீப வழிபாடு செய்து சிறப்பாக பொங்கல் கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில் கனி என்பவர் நூற்றுக்கு மேற்பட்ட நாட்டு இன பசுக்களை வளர்த்து பராமரித்து வருகிறார். கோசாலையில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி மாடுகளுக்கு சந்தனம் குங்குமம் ஆகிய வைத்து அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மாட்டுப்பொங்கலிட்டனர். 
பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

108 பசுக்களுக்கு கோ பூஜை

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகள் கொண்டு நந்திக்கு  அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது.

இதனையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுமாடு மற்றும் கன்றுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது. வாழைப்பழங்கள் மற்றும் பொங்கல் மாடுகளுக்கு வழங்கப்பட்டன. கொரோனா பாதிப்பால் ஒரு மாடு மட்டும் வைத்து நடத்தப்பட்ட மாட்டுப் பொங்கல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.  பக்தர்கள் பலரும் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனியில் தமிழர் திருநாளான பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

சுற்றுலா நகரமான நீலகிரியிலும் பல பகுதிகளில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. செங்கரும்பை வைத்து மண்பானையில் பொங்கல் பொங்க பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. 

இந்த பொங்கல் விழா போட்டிகளில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள் கூறுகையில் பொங்கல் விடுமுறைக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொங்கல் விழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதும் பூங்காவை குடும்பத்துடன் கண்டு ரசிப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.