Palamedu Jallikattu: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்து பெற்றது.
தைப்பொங்கலான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி 45 நிமிடங்களுக்கு ஒரு சுற்று என்ற வகையில் நடத்தப்பட்டது. ஒரு சுற்றில் தலா 25 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
அந்த வகையில், பாலமேட்டில் 9 காளைகளை அடக்கி நட்சத்திர வீரராக விளங்கிய அரவிந்த் ராஜ் என்பவரை காளை தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.