ஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இன்று(ஜன.,17) அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து, புட்காம் பகுதியில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement