பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், நேற்று பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்ற வீரரை காளை முட்டியதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.