வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு தழைவாழை இலையில் விருந்து வைத்தார் பிரதமர் ரிஷிசுனாக்.
பிரிட்டன் பிரதமாக பதவியேற்ற ரிஷி சுனாக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் லண்டனில் 10. டவுனிங் தெருவில் பிரதமர் அலுவலகம் உள்ளது. இங்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
![]() |
இதையடுத்து பிரதமர் அலுவலக ஊழியர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கு பிரதமர் சார்பில் விருந்து வைக்கப்பட்டது. இதில் தழைவாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. இதனை ஊழியர்கள் ருசித்து சாப்பிட்டனர். சிலர் இடது கையால் உணவருந்தினர். இதனை நம் ராஜ்யசபா எம்.பி., சோனால் மான்சிங், வீடியோவாக சமூக வலைதளங்களில் பதவிவேற்றினார். அது வைரலாக பரவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement