டெல்லி: மக்களுக்கும் கட்சிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஒற்றுமை பிரச்சாரம் நடத்தவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராகுல்காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாஜகவினர் ஒற்றுமை பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஒரே பாரதம், ஒற்றுமை பாரதம் என்ற முழக்கத்துடனும் அனைத்து மாநிலங்களும் ஒன்றோடொன்று ஒத்துழைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
