
13 சர்வதேச விருதுகளை வென்ற ‛லேபர்' படம் ஓடிடியில் வெளியானது
ராயல் பார்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'லேபர்' படத்தை அறிமுக இயக்குனர் சத்தியபதி இயக்கியுள்ளார். முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்பிரமணியன், கயல்விழி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிகில் தினகரன் இசையமைத்துள்ளார். இது தமிழகத்தில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் . இந்தப் படத்திற்கு 13 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. குளோஸ் அப் காட்சிகள் இன்றி எடுக்கப்பட்ட முதல் படம். சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் தியேட்டர் வெளியீட்டுக்காக காத்திருந்தது. தற்போது மூவிவுட் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.