தமிழகத்தில், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு சில மாதங்களாக தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு மருந்து வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு 30 லட்சம் டோஸ் மருந்துக்கான தேவை உள்ளதாகவும், கடந்த ஆண்டு 18 புள்ளி 38 லட்சம் டோஸ் மருந்து மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தை பிறந்து ஆறு, ஒன்பது மற்றும் பதினான்கு மாதங்களில் வழங்கப்படும் இந்த மருந்து, மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் டோஸ்கள் வரை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.