பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
இதில், நேற்று முன்தினம் பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்ற வீரரை காளை முட்டியதில் உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் மூர்த்தி நிவாரணம் வழங்கினார்.
அதன்படி, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு நிவாரணமாக, தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சார்பாக ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.