சென்னை: பிப்ரவரி 12ந்தேதி ஞாயிறன்று செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுவாக விடுமுறை தினங்கள், டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி, வங்கி போன்ற பணிக்கான தேர்வுகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பருவத்தேர்வு தேதியை அறிவித்துள்ளது. கடந்த 15ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (பொங்கலன்று) வங்கி தேர்வுதேதி அறிவிக்கப்பட்டதற்கே, தமிழக எம்.பி.க்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் […]
