நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு புறப்பட்ட குவாண்டாஸ் விமானம் நடுவானில் செயலிழந்த நிலையில், விமானி விடுத்த அவசர உதவிக்கான அழைப்பு உலகம் மொத்த பீதியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடுவானில் செயலிழந்த விமானம்
குவாண்டாஸ் விமானத்தின் எஞ்சின் ஒன்று நடுவானில் செயலிழந்ததால், பலத்த இடி சத்தம் கேட்டது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தரையிறங்கும் வரை நிலைமையின் தீவிரம் அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளர்.
ஆக்லாந்தில் இருந்து புறப்பட்டு, சிட்னி நகருக்கு பாதி தொலைவு கடந்த நிலையில், குவாண்டாஸ் விமானத்தின் எஞ்சின் ஒன்று நடுவானில் செயலிழந்துள்ளது.
இதனையடுத்து விமானி நடுவானில் mayday அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சிட்னி விமான நிலையத்தில் மருத்துவ உதவிக் குழுவினர் உட்பட அனைத்தும் தயார் நிலையில் கொண்டுவரப்பட்டது.
மட்டுமின்றி, குவாண்டாஸ் விமானத்தின் நிலை குறித்து தெரிந்துகொள்ள உலகெங்கிலும் இருந்து 200,000 பேர்கள், உரிய இணைய பக்கமூடாக கண்காணித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
@onscenebondi
மொத்தம் 145 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானமானது நடுவானில் செயலிழந்ததும், விமானி ஒருகணம் ஸ்தம்பித்துப் போனதாகவே கூறப்படுகிறது.
சுமார் ஒருமணி நேரம், சிட்னி நகரில் பத்திரமாக தரையிறங்கும் வரையில் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
பயணிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை
இருப்பினும், இந்த விவகாரம் எதுவும் பயணிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, பயணிகள் அனைவரும் தங்கள் மொபைல்போன்களை பயன்படுத்தலாம் என கூறியபோது, ஒருவர் தமது மனைவியிட இருந்து 18 முறை அழைப்பு வந்திருந்ததை அறிந்துள்ளார்.
@onscenebondi
மேலும், தரையிறங்கி விட்டீர்களா என பல முறை விசாரித்திருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னி நகரில் தரையிறங்க சுமார் ஒன்றரை மணி நேரம் எஞ்சியிருந்த நிலையிலேயே விமானம் செயலிழந்ததும், mayday அழைப்பு விடுக்கப்பட்டதும் என தெரியவந்துள்ளது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், ஏதும் அவசர உதவி தேவைப்படலாம் என்ற கோணத்தில் தான் mayday அழைப்பு விடுக்கப்பட்டதாக குவாண்டாஸ் நிர்வாகம் பதிலளித்துள்ளது.