புனித வனத்து அந்தோனியார் திருநாளை முன்னிட்டு, ஸ்பெயினில், வளர்ப்பு பிராணி உரிமையாளர்கள் நாய்களையும், பூனைகளையும் தேவாலயத்திற்கு அழைத்துவந்து ஆசிர்வாதம் வாங்கி சென்றனர்.
தலைநகர் மாட்ரிட்டிலுள்ள புனித அந்தோனியர் தேவாலயத்தில், வளர்ப்பு பிராணிகளின் உடல் நலனுக்காக சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பாதிரியாரால் புனித நீர் தெளிக்கப்பட்டு ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது.