ஆன்டிபயோடிக் மற்றும் ஆன்டிவைரல் மருந்துகள் உட்பட 128 மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை ஒழுங்காற்று ஆணையம் குறைத்துள்ளது.
அதன்படி, அமாக்சிலின், கிளவுலானிக் ஆசிட் உள்ளிட்ட ஆன்டிபயோடிக் ஊசி மருந்து, ஆஸ்துமா மருந்தான சால்புடமால், புற்றுநோய் மருந்து டிரஸ்டுசுமாப், காய்ச்சல் மற்றும் வலிக்கான பாரசிட்டமால் ஆகிய மருந்துகளுக்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமாக்சிலின் ஒரு மாத்திரியின் அதிபட்ச விலை ரூ. 2.18ஆகவும், சிட்ரசின் ஒரு மாத்திரையின் அதிகபட்ச விலை ரூ.1.68ஆகவும், அமாக்சிலின் மற்றும் கிளவுலானிக் ஆசிட் ஊசி மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 90.38ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மருந்துகளின் உற்பத்தியாளா்கள் அனைவரும், அரசு நிா்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மிகாமல் இருக்கும் வகையில் அந்தந்த மருந்துகளின் விலையை குறைத்து மாற்றியமைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சா்க்கரை நோய் எதிா்ப்பு மருந்தான கிலிமெபிரைட், வோக்லிபோஸ், மெட்ஃபாா்மின் ஆகியவற்றின் ஒரு மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.13.83-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, பாரசிட்டமால், ஃபெனைலெஃப்ரைன் ஹைட்ரோகுளோரின், டைஃபென்ஹைட்ராமைன் ஹைட்ரோகுளோரின், காஃபைன் ஆகியவற்றின் ஒரு மாத்திரை விலை ரூ.2.76ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
newstm.in