மத்திய அமைச்சரின் மகன் ஜாமின் மனு: ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்| Union Ministers sons bail plea: Adjourned by Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்ட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், 2021 அக்., மாதம், விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில், நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

latest tamil news

ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், கார் ஓட்டுனர் மற்றும் இரண்டு பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டனர்; பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய காரில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ரா உட்பட, ௧௩ பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமின் கேட்டு ஆசிஷ் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள வழக்கை, நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.கே. மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பை அமர்வு ஒத்தி வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.