இந்த ஆண்டில் 20 நாட்களில் மட்டும் முக்கிய ஐடி நிறுவனங்களில் இருந்து 24,000 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.டி துறையில் தற்போது ஒரு நிலையற்ற தன்மை உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இதே நிலைதான். இதனால் ஐடி ஊழியர்கள் பலரும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
2023ஆம் ஆண்டில் இந்த 20 நாள்களில் உலகின் முக்கியமான 91 ஐ.டி நிறுவனங்களிலிருந்து 24,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழல் தொடரும் என கூறப்படுகிறது.
அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், காய்ன்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பணி நீக்கத்தை செய்துள்ளதாக லேஆஃப் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனமான க்ரிப்டோ 20 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம் ஜனவரி மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் மட்டும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 17,000 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காலமான 2022ஆம் ஆண்டு வரை மெட்டா, ட்விட்டர், ஆரக்கிள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் 1,51,110 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டர்.
கூகுள் நிறுவனம் விரைவில் பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக அளவில் ஐடி ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
newstm.in