சென்னை: ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம் – மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அதிபர்கள், தலைவர்கள் பிப்ரவரி 1ம் தேதி செங்கல்பட்டுக்கு வருகை தருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க ஒன்றிய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
